1300 கோடி மதிப்பிலான போதை பொருட்கள்: இந்தியாவில் அதிகரித்து வரும் மாஃபியா

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (12:19 IST)
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக போதை பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி மண்டல இந்திய போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் 275 கிலோ போதை பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

பெரும்பாலும் இந்த போதை பொருட்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்டுள்ளது. கொக்கைன் மற்றும் மெத்தம்பிட்டமைன் ஆகிய போதை பொருட்கள் இந்தியாவிற்குள் அதிகமாக கடத்தப்பட்டுள்ளதாக போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த கடத்தலில் தொடர்புடைய 5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் இந்திய மதிப்பு 1300 கோடி என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்