நித்தி விவகாரம்; பெண் சீடர்களுக்கு ஜாமீன் மறுப்பு

Arun Prasath

சனி, 14 டிசம்பர் 2019 (09:10 IST)
குழந்தைகளை கடத்தியதாக கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது அஹமதாபாத் நீதிமன்றம்.

நித்யானந்தா மீது குழந்தை கடத்தல், பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டிருந்த நிலையில் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். மேலும் அவர் ஈகுவேடார் நாட்டில் கைலாசா என்னும் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகவும் பல தகவல்கள் வருகின்றன.

இதனிடையே நித்யாந்தாவின் முன்னாள் சீடரான ஜனார்த்தன ஷர்மாவின் 2 பெண்களையும் கடத்தி கொடுமைப்படுத்துவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், குஜராத்தின் அஹமதாபாத் ஆசிரம பொறுப்பாளர் பிரன்பிரியா மற்றும் அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அஹமதாபாத் நீதிமன்றத்தில் இருவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, கடந்த 27 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அவ்விருவரின் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது இவ்விருவருக்கும் ஜாமீன் வழங்க அஹமதாபாத் நீதிமன்றம் மறுத்துள்ளது. இருவரும் தீவிர குற்றத்தில் ஈடுபட்டதால் ஜாமீன் அளிக்கமுடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்