கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஆண்டு தொடக்கம் முதலே மஞ்சள் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், தற்போது அதன் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை இந்த காய்ச்சலால் 74 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 34 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த மஞ்சள் காய்ச்சலானது ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் என்ற வகை கொசுக்களால் பரவுவது கண்டறியப்பட்ட நிலையில், கொசுக்களை ஒழிப்பதற்கான பணிகளில் கொலம்பியா ஈடுபட்டு வருகிறது. மேலும் மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது கொலம்பியா.
Edit by Prasanth.K