திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (11:24 IST)
மத்திய பிரதேச மாநிலத்தின் புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் பாண்டே  என்பவர் நான்கு மாதங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த சிறுமி யுவராஜ் என்ற வாலிபரை முன்பே காதலித்து வந்ததாக தெரியவந்தது.
 
சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிராக இருந்து, உறவுக்கார ராகுலுடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகும், அந்த சிறுமி தனது காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் ராகுலை கொலை செய்ய  முடிவு செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
 
ஏப்ரல் 13-ஆம் தேதி, ராகுல் தனது மனைவியுடன் ஷாப்பிங் சென்று வீடு திரும்பும்போது, ஒரு திட்டமிட்ட கொலை நடந்தது. நெடுஞ்சாலையில், “செருப்பு விழுந்துவிட்டது” என கூறி மோட்டார் சைக்கிளை நிறுத்தச் சொன்ன மனைவிக்காக பைக்கை நிறுத்தியபோது, அருகில் பதுங்கியிருந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ராகுலை பீர்பாட்டிலால் தாக்கி, உடைந்த பாட்டிலால் 36 முறை குத்தி கொலை செய்தனர்.
 
கொலைக்குப் பின், ராகுலின் உடலை காட்டுப்பகுதியில் தூக்கி வீசி பின்னர் சிறுமியும் அவருடைய காதலனும் தலைமறைவாகினர்.
 
பின்னர் நடந்த போலீஸ் விசாரணையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்