உலகை உலுக்கிய ஒடிசா கிறிஸ்தவ மத போதகர் கொலை வழக்கில் விடுதலையான குற்றவாளியை இந்து அமைப்பினர் மாலை போட்டு வரவேற்றுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தில் 1999ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மத போதகரான கிரஹாம் ஸ்டெயின்ஸும், அவரது 10 வயது மகன் பிலிப் மற்றும் 6 வயது மகன் டிமோதி ஆகியோரும் காருக்குள் வைத்து எரித்துக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அன்றே உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தாரா சிங் என்பவனும், மகேந்திர ஹேம்பிராம் உள்ளிட்ட 13 பேரும் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீடுக்கு பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இரண்டாம் நிலை குற்றவாளிகளாக ஆயுள் தண்டனை பெற்றவர்களில் மகேந்திர ஹேம்பிராமும் ஒருவர். 25 வயதில் சிறைக்கு சென்ற இவர் சமீபத்தில் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். விடுதலையாகி வெளியே வந்த ஹேம்பிராம், இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும், வேண்டுமென்றே தான் சிக்க வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
விடுதலையாகி வெளியே வந்த அவருக்கு அப்பகுதியை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாலை அணிவித்து வரவேற்றுக் கொண்டாடியுள்ளனர்.
Edit by Prasanth.K