ஐபோன் வாங்கி தந்தால் தான் சாப்பிடுவேன் என மூன்று நாள் தனது மகன் பட்டினி கிடப்பதை காண சகிக்காமல் பூ விற்கும் ஏழை தாய் ஒருவர் தனது மகனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த இளம் வாலிபர் ஐபோன் வாங்குவதற்காக தனது தாயாருடன் கடைக்கு கட்டுக்கட்டாக பணத்தை கொண்டு வந்த நிலையில் அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் இந்த பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டார்.
அப்போது வாலிபரின் தாயார் தனது மகன் ஐபோன் வாங்கி கொடுக்கும்படி மூன்று நாட்களாக பட்டினி இருந்ததாகவும் அதனால் நான் கோவிலில் பூ வியாபாரம் செய்து சேர்த்து வைத்த பணத்தில் ஐபோன் வாங்க பணம் கொடுத்தேன் என்றும் அந்த பணத்தை சம்பாதித்து திருப்பி கொடுக்க வேண்டும் என்று நான் அவனிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு மீறி குழந்தைகளிடம் அன்பு செலுத்தினால் அது குழந்தைகளை அழித்துவிடும் என்றும் குழந்தைகளுக்கு வீட்டின் வறுமையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்றும் கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்க கூடாது என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
ஐபோன் கேட்ட மகனே செருப்பால அடித்து பட்டினி போட்டு இருக்க வேண்டும் என்றும் அந்த பணத்தை அந்த தாய் சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்றும் பலர் கமெண்ட் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.