தாய்லாந்து பிரதமர் அதிரடி நீக்கம்.. அரசியல் சாசனத்தை மீறியதாக குற்றச்சாட்டு..!

Siva

புதன், 14 ஆகஸ்ட் 2024 (18:29 IST)
அரசியல் சாசனத்தை மீறியதாக தாய்லாந்து பிரதமர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்து நாட்டின் பிரதமராக ஸ்ரெத்தா தசின் என்பவர் இருந்து வரும் நிலையில் இவர் ஆறு மாதம் சிறந்த சிறை தண்டனை பெற்ற ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பிச்சித் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அமைச்சர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும் அவர் அரசியல் சாசன நடத்தை விதிகளை மீறி விட்டார் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அமைச்சர் பிச்சித் சிறை தண்டனை பெற்றவர் என்பவர் என்பது மட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் அவரை நன்னடத்தை இல்லாத வரை என்று குறிப்பிட்டுள்ள நிலையில் அவரை அமைச்சராக தேர்வு செய்த பிரதமர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை காபந்து அடிப்படையில் அமைச்சரவை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் தாய்லாந்து அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்