தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளனர். முதலமைச்சர் விரைவில் குணமாக வேண்டும் என்றும் அவர்கள் வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், அவர் கலந்து கொள்ள இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மு.க. ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தொலைபேசி மூலம் நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவருமே முதலமைச்சர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.