போர் செல்லும் வீரன், ஒரு தாய் மகன் தான்.. சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டிரைலர்..!

Mahendran

புதன், 14 ஆகஸ்ட் 2024 (10:51 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த படம் வரும் தீபாவளி அன்று அதாவது அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
இந்த ட்ரெய்லரில் அமைதியாக இருக்கும் காஷ்மீரில் திடீரென குண்டுகள் வெடிப்பது அந்த குண்டுகளில் பொதுமக்கள் மட்டும் இன்றி ராணுவ வீரர்களும் பலியாவது போன்ற உருக்கமான காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்