ஒரு நாள் மழைக்கே இந்த நிலையா? முடங்கியது மும்பை!

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (16:19 IST)
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
 
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அடுத்த நான்கு நாட்களுக்கு மிக பலத்த மழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
மும்பையில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 
 
ஒரு நால் மழைக்கே மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  
 
மேலும், அங்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினரும் துணை ராணுவப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்