18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

சனி, 5 ஏப்ரல் 2025 (19:08 IST)
18 வயது இளம் பெண்ணை எட்டு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, செலவுக்காக 100 ரூபாய் கொடுத்து அனுப்பிய சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
18 வயது இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக ஒரு இளைஞர் ஆசை காட்டி, ரயில் நிலையத்திற்கு வரவழைத்தார். அதன் பின்னர், அவரை ரயிலில் ஏற்றச் செய்துவிட்டு, தனது நண்பர்களையும் அழைத்துள்ளார்.
 
இந்த நிலையில், அந்த பெண்ணை தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர், அவருக்கு 100 ரூபாய் கொடுத்து அனுப்பிவிட்டனர்.
 
அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குற்றவாளிகளில் ஆறு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இன்னும் இருவர் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
எட்டு பேர் சேர்ந்து ஒரு இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, 100 ரூபாய் செலவுக்காக கொடுத்து அனுப்பிய சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்