வக்பு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக கிறிஸ்தவர்கள் பக்கம் ஆர்எஸ்எஸ் கவனம் செலுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இன்று இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராகுல் காந்தி நேற்றைய பேட்டியில் இது குறித்து கூறியபோது, “வக்பு மசோதா முஸ்லிம்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்” என்று தெரிவித்தார். “இது முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; அடுத்தடுத்து மற்ற சமூகத்தினர்மீதும் இதே போன்ற தாக்குதலை கொடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடுத்த கவனம் கிறிஸ்தவர்கள் பக்கம் திரும்ப அதிக காலம் ஆகாது” என்றும் அவர் கூறினார்.
நில உரிமையில் வக்பு வாரியங்களை மீண்டும் அளவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள் என்ற தகவலுடன் வெளியான கட்டுரையை காங்கிரஸ் செயலாளர் பதிவு செய்திருந்தார் என்றும், “நான் கணித்தது போலவே இன்னொரு சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டுள்ளனர்” என்றும் ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.