சென்னையில் கனமழை ; வெள்ளக்காடான சாலைகள் : பொதுமக்கள் அவதி

புதன், 6 ஜூன் 2018 (18:03 IST)
சென்னையில் இன்று பெய்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 
அக்னி வெயில் முடிந்து சில நாட்கள் ஆன நிலையிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வந்தது. இதனால், இரவிவில் புழுக்கம் அதிகமாகவே இருந்தது. 
 
இந்நிலையில், இன்று 1.30 மணியளவில் வானம் இருட்டத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சென்னையின் தி.நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், கே.கே.நகர்,  மெரினா, அயனாவரம், அண்ணாசாலை, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது. 4 மணி வரை இந்த மழை நீடித்தது. இது சென்னைவாசிகளுக்கு மிகவும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த மழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்