இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Siva

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (07:48 IST)
வக்ஃப் சொத்துகளின் மேலாண்மையை முறைப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
 
இந்த மசோதா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்கட்சி உறுப்பினர்களின் வலிய எதிர்ப்பால், இது நாடாளுமன்ற இணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த குழு 655 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை தயாரித்தது. அதில் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.
 
மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர், திருத்தம் செய்யப்பட்ட மசோதா கடந்த வாரம் மக்களவையும் மாநிலங்களவையும் தாக்கி வந்தது. விவாதங்களில், இந்தியா கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தங்களது வேற்றுமைகளைத் தெரிவித்தன. இருந்தாலும், பெரும்பான்மையுடன் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது.
 
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழ் மூலம் அறிவித்துள்ளது.
 
இதேவேளை, காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்