அக்னி வெயில் முடிந்து சில நாட்கள் ஆன நிலையிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வந்தது. இதனால், இரவில் புழுக்கம் அதிகமாகவே இருந்தது.
இன்று சென்னை மற்றும் புறநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. தெற்கு அரபிக்கடல் வங்கக்கடலில் தென்மேற்கு பருவகாற்று வலுவாக வீசுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்” என அவர் தெரிவித்தார்.