தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை: சென்னை வானிலை மையம்
திங்கள், 4 ஜூன் 2018 (19:40 IST)
தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் கனமழை பெய்ததில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென் தமிழக மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவநிலை ஆரம்பம் ஆகியுள்ள நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 29ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறினார்.