உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து வயது குழந்தை மொபைலில் கார்ட்டூன் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்பெல்லாம் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு என்பது வரும். ஆனால் தற்போது இளம் பருவத்தினர்களுக்கு கூட மாரடைப்பு வந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மொபைலில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்தது. உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி இறந்து விட்டதாக கூறப்பட்டது.
சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அனுமதி கேட்டதாகவும் ஆனால் பெற்றோர் அனுமதி தரவில்லை என்பதால் உண்மையாகவே சிறுமி மாரடைப்பு காரணமாக இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்ததா? என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குளிர்கால நிலை காரணமாக குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆக்சிஜன் மற்றும் ரத்த அழுத்தம் குறைந்திருப்பதால் நான் மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.