ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை வைக்கப்படுவது ஏன்? – இதுதான் காரணம்!

Prasanth Karthick

திங்கள், 22 ஜனவரி 2024 (11:42 IST)
இன்று அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. குழந்தை ராமரை இந்த நாளில் ஏன் பிரதிஷ்டை செய்கிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.


 
விஷ்ணு பகவானின் அவதாரங்களில் ஏழாவது அவதாரமாக அவதரித்தவர் ஸ்ரீராமர். முன்னதாக பிராமண அவதாரமான பரசுராமர் அவதாரத்தில் தோன்றிய பெருமாள் லோகத்தில் உள்ள ஷத்ரியர்களை பல தலைமுறைகளுக்கும் அளித்தார். அதன் பாவ புண்ணியங்களை ஈடு செய்ய ஸ்ரீராமராக ஷத்ரிய குலத்திலே விஷ்ணு பெருமாள் அவதரித்தார்.

ராம அவதாரத்துக்கு பிந்தைய அவதாரமான கிருஷ்ண அவதாரத்திற்கு பால கிருஷ்ணர், இளமை ததும்பு ஆயர்பாடி புல்லாங்குழல் கிருஷ்ணன், பாமா ருக்மணி சகிதம் காட்சி தரும் கிருஷ்ணர் என பல ரூபங்களிலும் கிருஷ்ணர் வணங்கப்படுகிறார். அதுபோல ராம அவதாரத்திற்கு மதுரா, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல திருஸ்தலங்களில் கோதண்டபாணியாக, கேசவ பெருமாளாக, பட்டாபிராமனாக ராம பெருமான் காட்சி தருகிறார். ஆனால் ராமரின் குழந்தை தோற்றம் எந்த கோவிலிலும் பிரசித்தி இல்லை.

ALSO READ: விழாக்கோலம் பூண்ட அயோத்தி..! பிரதமர் மோடி வருகை.! குவிந்த பிரபலங்கள்..!!
 
அந்த வகையில் ராமர் பிறந்த அயோத்தியில் கட்டப்படும் கோவில் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்வது ஏற்புடையதாக அமைகிறது. சூரிய வம்சியான ஸ்ரீராமர் சிலையை சிருஷ்டிக்கும் நாள் சூரியனின் அருள் தரும் உத்தராயணத்தில் அமைய வேண்டும் என்பதாலேயே இந்த தினத்தில் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்கின்றனர். இதன்மூலம் இந்தியாவில் குழந்தை ராமர் சிலை உள்ள பிரபலமான கோவிலாக அயோத்தி ராமர் கோவில் புகழ்பெறுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்