Mr fix it என்றால் அது ராகுல்தான்… புகழ்ந்து தள்ளிய ஆஸி வீரர்!

vinoth
சனி, 15 மார்ச் 2025 (10:55 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியேக் காணாமல் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையைக் கைபற்றி அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல், வருண் சக்ரவர்த்தி, ஷமி என எனப் பலரும் சிறப்பாக பங்காற்றினார்.

குறிப்பாக ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்க்கி இக்கட்டான போட்டிகளில் நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் கே எல் ராகுல். இறுதிப் போட்டியில் கூட அவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ராகுல் தற்போது தோனிக்கு அடுத்து இந்திய அணிக்கு சிறந்த பினிஷராக உருவாகியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் கே எல் ராகுலை “Mr Fixit” எனப் புகழ்ந்துள்ளார் ஆஸி அணி பவுலர் மிட்செல் ஸ்டார்க். இது குறித்து பேசியுள்ள அவர் “பேட்டிங்கில் ஓப்பனிங் இறங்கி விளையாடுகிறார். பின் வரிசையில் இறங்க சொன்னாலும் இறங்கி விளையாடுகிறார். கீப்பிங்கும் செய்கிறார். பீல்டிங்கும் செய்கிறார். அவர் பந்துவீச மட்டும் செய்யவில்லை. மற்ற அனைத்து வேலைகளையும் செய்துவிடுகிறார். அதனால் அவரை Mr Fixit என்றே கூறலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்