இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் யார்?... வெளியான தகவல்!

vinoth

சனி, 15 மார்ச் 2025 (14:07 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

இந்த தொடர்தான் கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் கடைசித் தொடராக இருக்கும் என்றெல்லாம் தகவல்கள் பரவின. தற்போது 37 வயதாகும் அவர் எப்படியும் அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார். அதனால் இப்போதிருந்தே புதியக் கேப்டனை தயார்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போதைக்கு தான் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெறப் போவதில்லை என்று அறிவித்தார்.

இதற்கிடையில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது ரோஹித் ஷர்மாவே அந்த தொடரில் கேப்டனாக செயல்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்