இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல், வருண் சக்ரவர்த்தி, ஷமி என எனப் பலரும் சிறப்பாக பங்காற்றினார். கடைசி போட்டியில் ரோஹித் ஷர்மா சிறப்பாக அடி அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதனால் இந்த தொடர் வெற்றி இந்திய அணியின் கூட்டு பங்களிப்பின் வெற்றியாகவேக் கருதப்படுகிறது. இந்த தொடரை இந்திய அணி வென்றாலும் ஒரே மைதானத்தில் விளையாடியது அனுகூலமாக அமைந்தது என விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்திய அணி பற்றி பாராட்டி பேசியுள்ளார். அதில் “ஒரே நாளில் இந்திய அணியால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் வேறு வேறு வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க முடியும். அந்த அணிகள் எதிரணிகளுக்குக் கடுமையான சவாலை அளிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.