"வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மக்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்வது வழக்கம். அதுபோல், ஒற்றுமையை போற்றும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். இதை சில அரசியல்வாதிகள் விரும்பவில்லை. தங்கள் மனதில் நஞ்சு கொண்ட சிலர் மக்களை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர். அவர்களுக்கு பிரச்சனை இருந்தால், கதவுளை அடைத்துக்கொண்டே இருக்க வேண்டாம். நாட்டை விட்டு வெளியேறலாம்." என்று கூறியுள்ளார்.
"வெறுப்பை பரப்பும் வகையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட யாருக்கும் உரிமை இல்லை. இது, அமைச்சராக இருப்பவருக்கும் பொருந்தும். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, நிறங்களை தவிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரமாணம் செய்யவில்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.