என்னால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது.. வருண் சக்ரவர்த்தி ஓபன் டாக்!

vinoth

சனி, 15 மார்ச் 2025 (14:19 IST)
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்த தொடரில் மிகச்சிறப்பான பங்களிப்பு ஆற்றிய வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ர்வர்த்தி. கடைசி நேரத்தில் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்ற அவர் மொத்தம் 9 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்களில் அவர் தனக்கான இடத்தை வலுப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து வருண் பேசியுள்ளார். அதில் “எனக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் உள்ளது. ஆனால் என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்தது அல்ல.  என்னுடைய ஆக்‌ஷன் மற்றும் பவுலிங் பாணியால் டெஸ்ட் கிரிக்கெட்களில் நீண்ட ஸ்பெல்களை வீச முடியாது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்