இந்த தொடர்தான் கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் கடைசித் தொடராக இருக்கும் என்றெல்லாம் தகவல்கள் பரவின. தற்போது 37 வயதாகும் அவர் எப்படியும் அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார். அதனால் இப்போதிருந்தே புதியக் கேப்டனை தயார்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போதைக்கு தான் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெறப் போவதில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில் ரோஹித் ஷர்மா களத்தில் கோபப் படுவது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் மைதானத்தில் அதிகமாக உணர்ச்சிப்படுவேன். அதனால் சில நேரம் சக வீரர்களைத் திட்டிவிடுவேன். ஆனால் அது அவர்களைப் புண்படுத்துவதற்காக அல்ல. நாங்கள் எல்லோரும் சகோதரர்கள்தான். இந்திய அணி ஒரு குடும்பம் போன்றது” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.