அமெரிக்க துணை அதிபரின் மனைவி இந்திய வம்சாவளி பெண்.. சுவாரசிய தகவல்..!

Mahendran
செவ்வாய், 21 ஜனவரி 2025 (11:21 IST)
அமெரிக்காவில் நேற்று அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், துணை அதிபராக ஜேடி வேன்ஸ் என்பவர் பதவியேற்றார். இவரது மனைவியை உஷா வேன்ஸ் என்பவர், இந்திய வம்சாவளி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதிபரின் மனைவி நாட்டின் முதல் பெண்மணி என்று அழைக்கப்படும் நிலையில், துணை அதிபரின் மனைவியை "நாட்டின் இரண்டாவது பெண்மணி" என்று அழைக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் ஜேடி வேன்ஸ் மனைவி உஷா, அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி என்று தற்போது பொதுமக்கள் அழைத்து வருகின்றனர்.
 
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெறும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உஷா என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அதிபராக பதவியேற்ற பின் டொனால்ட் பேசிய போது, ஜேடி வேன்ஸ் மனைவி உஷா மிகவும் புத்திசாலி என்றும் பாராட்டினார்.
 
38 வயதே ஆன உஷா, ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நிலையில், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த இவர், 2014 ஆம் ஆண்டு வேன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 
 
இந்த நிலையில், "அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் இந்தியாவின் மருமகன் என்பதில் பெருமை கொள்கிறோம்" என இந்தியர்கள் இச்செய்தி பற்றி கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்