மகா கும்பமேளாவில் பாசிமணி விற்கும் இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டத்தால் பரிதாபம்..!

Mahendran

செவ்வாய், 21 ஜனவரி 2025 (18:16 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பாசிமணி விற்க வந்த பெண் ஒருவரை சுற்றி இளைஞர்கள் பலர் செல்பி எடுத்த குவிந்ததால் அந்த பெண் வியாபாரத்தை விட்டு விட்டு சொந்த ஊருக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் மோனாலிசா என்பவர் மகா கும்பமேளாவில் பாசிமணி மாலையை விற்று வந்தார். எளிமையான தோற்றம்,  அழகிய கண்கள், தன்னம்பிக்கையான பேச்சு, சிரித்த முகம் ஆகியவை காரணமாக திடீரென இணையத்தில் வைரலானார்.

இதனை அடுத்து அவரை தேடி ஏராளமான இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொள்ளவும், வீடியோ எடுத்துக் கொள்ளவும்  முயற்சித்தனர்.  நாளுக்கு நாள் அவரை தேடி வரும் கும்பல் அதிகமானதை அடுத்து  சிலர் அத்துமீறி அவரை அவமரியாதை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை அவரை தனது சொந்த ஊருக்கே அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.   மகா கும்பமேளாவுக்கு வந்த பக்தர் தனது மகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்