அமெரிக்காவில் ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே.. அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு..!

Siva

செவ்வாய், 21 ஜனவரி 2025 (08:05 IST)
அமெரிக்க அதிபராக டொனால்ட் நேற்று பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் பதவியேற்ற உடன் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் அவற்றில் ஒன்று அமெரிக்காவில் இனி ஆண், பெண் என்ற இரண்டு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை தடை, ராணுவத்தில் மாற்று பாலினத்தவர்கள் பணிபுரிய தடை ஆகிய உத்தரவுகளையும் அவர் கையெழுத்திட உள்ளதாக அவர் தனது முதல் உரையில் பேசி உள்ளார்.

மேலும் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில் அவர் இரண்டாவது முறையாக கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் முதல் முறையாக அமெரிக்காவில் அதிபராக இருந்தபோது இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜோ பைடன் அதிபர் ஆனதும் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் இரண்டாவது முறையாக டிரம்ப் அதிபராகியுள்ள நிலையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர் அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல் நாளே ஒரு சில அதிரடி அறிவிப்புகளை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து இன்னும் என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்