டிரம்ப் முயற்சியால் டிக் டாக் செயலியை மீண்டும் அமெரிக்காவில் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக டிக் டாக் நிறுவனமும் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் 170 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட டிக்டாக் சேவை நேற்று திடீரென முடங்கியதால் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் மீண்டும் டிக் டாக் செயலி செயல் பட அனுமதி அளிக்க போகும் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.