தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், இதுகுறித்து அண்ணாமலை ஆவேசமடைந்துள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் திரு அப்பாவு அவர்கள், அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரைக் கேலி செய்ய, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனைக் குறிப்பிட்டு, “தம்பி ஞானசேகரன்” என்று பேசியுள்ளார்
தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே?