துபாய் மக்களே ஜாக்கிரதை.. மீண்டும் வெளுக்க போகுது கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (10:04 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் துபாய் உள்பட சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
துபாய், பஹ்ரை,ன் தோஹா, ரியாத் ஆகிய பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்யப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ள துபாய் நகரம் ஒரு வறண்ட பிரதேசம் என்றும் அங்கு வருடத்திற்கு 100 மில்லி மீட்டர் மழை கூட பெய்யாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் ஏப்ரல் 16ஆம் தேதி ஒரே நாளில் 25 சென்டிமீட்டர் மழை பெய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் துபாய், பக்ரைன், தோஹா, ரியாத் போன்ற பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் மே 2ஆம் தேதி துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மே 1ஆம் தேதி பக்ரைனில் மழை பெய்யும் என்றும் மே 1, 2 ஆகிய இரு நாட்களில் தோஹா, ரியாத் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்