துபாய் மழையில் சிக்கி கொண்டாரா நடிகர் விஜய்? வாக்களிக்க வருவாரா?

Siva

வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (08:43 IST)
நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து கிளம்பிய நிலையில் அவர் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் அதனால் அவர் வாக்களிக்க வருவதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற நிலையில் நேற்று அவர் ரஷ்யாவில் இருந்து ஓட்டு போடுவதற்காக கிளம்பியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சென்னை வந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி விஜய் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் துபாயில் பெய்து வரும் காண மழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர் இன்னும் துபாயில் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று விமான சேவையை பொருத்து விஜய் சென்னை வருவார் என்றும் காலதாமதமாக வந்தாலும் மாலை ஐந்து மணிக்குள் அவர் வந்துவிட்டால் கண்டிப்பாக தனது வாக்கை செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்