இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

Siva

வியாழன், 28 நவம்பர் 2024 (16:41 IST)
தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் இன்று இரவு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் மெதுவாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், இன்று இரவு தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில், அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட 22 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva

pic.twitter.com/m8y5m9fcuT

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 28, 2024

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்