9 மாவட்டங்களை வெளுக்க போகும் வெயில்! – தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

Prasanth Karthick

திங்கள், 29 ஏப்ரல் 2024 (11:42 IST)
தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் 9 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாட்டில் ஏப்ரல் தொடக்கம் முதலே பல இடங்களில் வெயில் வாட்டி வருகிறது. இப்போதே பல பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வீசிவரும் நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கினால் என்ன ஆகுமோ என மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வருகிற மே 1ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும், மே 5ம் தேதிக்கு பிறகு அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின் சில இடங்களில் லேசன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதே வெயில் வாட்டி வருவதால் அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள், தன்னார்வல அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் நிழற்குடைகள், தண்ணீர், நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றன.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்