20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

Mahendran

வியாழன், 28 நவம்பர் 2024 (15:48 IST)
சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 20 வருடங்களாக மூக்கில் டைஸ்.என்ற பகடைக்காய் இருந்த நிலையில் தற்போது தான் அது கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சீனாவை சேர்ந்த 23 வயது சியோமா என்ற இளைஞருக்கு அடிக்கடி தும்மல், சளி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அந்த இளைஞரின் மூக்கிற்குள் பகடைக்காய் இருந்தது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
 
சியோமோ சிறுவனாக இருந்த போது தெரியாமல் பகடைக்காயை அவருடைய மூக்கில் நுழைத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டதாக தெரிகிறது.
 
தற்போது அவர் 23 வயதில் இருக்கும் நிலையில், சுமார் 20 ஆண்டுகள் அந்த பகடைக்காய் மூச்சுக் குழாயில் இருந்திருக்கலாம் என்று அதை வெளியே எடுத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெளியேற்றப்பட்ட பகடைக்காய் சிதைந்த நிலையில் இருந்ததாகவும், இரண்டு சென்டிமீட்டர் நீளத்தில் இருந்ததாகவும், அதை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றியதாகவும் தெரிகிறது.
 
எனவே, குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மூக்கில் போன சிறிய பொருள் சில சமயம் கண்டுபிடிக்க பல வருடங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்