பழசை மறக்கக் கூடாது.. 80 கோடி பரிசு விழுந்தும் வடிகால் வேலைக்கு செல்லும் இளைஞர்!

Prasanth Karthick
புதன், 22 ஜனவரி 2025 (13:42 IST)

லாட்டரியில் பல கோடி பரிசு விழுந்தபோதும், அதை செலவு செய்யாமல் இளைஞர் ஒருவர் தனது பழைய வேலையையே செய்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பல நாடுகளிலும் லாட்டரி குலுக்கல் முறை உள்ள நிலையில் சில சமயங்களில் மிகவும் வறிய நிலையில் உள்ள சிலருக்கு லாட்டரி அடித்து ஒரே நாளில் கோடீஸ்வரனாகிவிடும் சம்பவங்கள் நடக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் இங்கிலாந்திலும் நடந்துள்ளது.

 

இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் 20 வயதான இளைஞர் ஜேம்ஸ் க்ளார்சன். தினசரி வடிகால் சுத்தம் செய்யும் பணி செய்து அதில் கிடைத்த சம்பளத்தில் வாழ்ந்து வந்த க்ளார்சன் சமீபத்தில் லாட்டரி சீட்டு ஒன்று வாங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அதில் அவருக்கு இந்திய ரூபாயில் ரூ.80 கோடி பரிசு விழுந்துள்ளது.
 

ALSO READ: கோட்டை விட்ட கேம்சேஞ்சர்… வசூல் மழைப் பொழியும் வெங்கடேஷ் படம்.. 200 கோடியா?

 

பொதுவாக இதுபோல பல கோடி பரிசு விழுந்தால் மற்றவர்கள் வேலையை விட்டு விட்டு சொகுசு வாழ்க்கைக்கு நகர்ந்து விடுவார்கள். ஆனால் க்ளார்சனோ லாட்டரி பரிசு கோடிக்கணக்கில் கிடைத்தும் அடுத்த நாள் வழக்கம்போல வடிகால் சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றுள்ளார்.

 

இதுபற்றி பேசிய அவர் தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் கடனை அடைப்பது, சுற்றுலா செல்வது, கார் வாங்குவது என பல திட்டங்கள் உள்ளதாகவும், ஆனால் வாழ்க்கை கொடுத்த தனது வேலையை மறக்காமல் தினமும் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணம் வந்ததும் பழசை மறக்காத அவர் மனசை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்