கடந்த சில நாட்களுக்கு முன்னாடி திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் தற்போது அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 44 மணி நேரம் சோதனை நடந்ததாகவும் கதிர் ஆனந்த் அவர்களுக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து 13 கோடி ரொக்கம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனை ஏற்று இன்று கதிர் ஆனந்த் எம்பி ஆஜர் ஆகியுள்ளதாகவும் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.