போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்..! புதினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

Prasanth Karthick

புதன், 22 ஜனவரி 2025 (10:19 IST)

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து பேசியுள்ளார்.

 

 

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022ம் ஆண்டில் போர் தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில், ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியுடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டது உக்ரைன்.

 

தற்போது அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அதுபோல உக்ரைன் - ரஷ்யா போரிலும் ட்ரம்ப் அமைதியை நிலைநாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தான் அதிபராக வெற்றிபெற்ற போதே இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு போன் செய்து பேசியிருந்தார் ட்ரம்ப்.

 

உக்ரைன் - ரஷ்யா போர் பற்றி பேசிய அவர் “நாங்கள் ஜெலன்ஸ்கியுடன் பேசி வருகிறோம். புதினிடமும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம்” என்று கூறியுள்ளார்.

 

இதனால் விரைவில் இரு நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்