அமெரிக்கா அதிபராக கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் குடியுரிமை குறித்த முக்கிய உத்தரவில் கையெழுத்திட்ட நிலையில் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள 22 மாகாணங்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் தாய் அல்லது தந்தை அமெரிக்க குடிமகனாகவோ அல்லது சட்டபூர்வ நிரந்தர குடியிருப்பாளராகவோ இல்லாவிட்டால் அவர்களுடைய குழந்தைக்கு குடியுரிமை கிடையாது என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கொலம்பியா, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட 22 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும், அமெரிக்க அரசியல் அமைப்பை டிரம்ப் மீறியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
குடியுரிமை குறித்த உத்தரவை உத்தரவில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் டிரம்ப் அரசு இந்த சட்ட போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் இந்த உத்தரவு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான குழந்தைகளுக்கு குடியுரிமை பெறும் உரிமை மறுக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.