இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்குதல் நடத்தியதாக 1500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக 450 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு அவர் உத்தரவு பரப்பித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார் என்ற செய்தி கேட்டதும் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், வெள்ளை மாளிகை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களை வைத்து தாக்கினார்கள் என்பதும் இந்த வழக்கில் தான் 1500 பேருக்கு கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.