வாயை பிளக்க வைக்கும் அமெரிக்க ராணுவ பட்ஜெட்!

Webdunia
சனி, 26 மே 2018 (19:18 IST)
உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
 
ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
 
சீனா, ரஷ்யா, வடகொரியா, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க ராணுவ பட்ஜெட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 
 
அதன்படி 2019 ஆம் ஆண்டு ராணுவ பட்ஜெட்டுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.48,55,883 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செனட் அவையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்