அவர் கூறியதாவது, ஈரான் தன் அணு நடவடிக்கைகளில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யவில்லையெனில், சிரியா போரிலிருந்து வெளியே வரவில்லையெனில் அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கும் என்று எச்சரித்தார்.
இதனையடுத்து ஈரான் ராணுவ கமாண்டர், ஈரான் மக்கள் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். அமெரிக்க செயலர் பாம்ப்பியோவின் வாயிலேயே குத்த வேண்டும். அவரை ஆதரிப்பவர்கள் வாயிலும் குத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், வரலாற்றை உற்று நோக்கினால் ஹிரோஷிமா, நாகசாகியை அணுகுண்டு வீசி தாக்கிய அமெரிக்காதான் உலகின் நம்பர் 1 கிரிமினல் என்றும் காட்டமாக அமெரிக்காவை தாக்கி பேசியுள்ளார்.