அதிபர் டிரம்ப் பொது உறவுகள் பற்றி சிந்திக்கவில்லை, அவர் சமாதானத்தை பற்றியே நினைக்கிறார் என்று மைக் கூறினார். முன்னதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறிய சில கருத்துகளால், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் போகலாம் என்று வட கொரியா எச்சரித்திருந்தது.
வட கொரியாவில் "லிபியா மாதிரி" போன்ற ஒன்றை பின்பற்ற வேண்டும் என்று ஜான் போல்டன் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.
இந்நிலையில், உச்சிமாநாடு குறித்து கலந்தாலோசிக்க, அதிபர் டிரம்பை, தென் கொரியத் தலைவர் மூன் ஜே-இன் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.