அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இதில் மூன்று இந்தியர்கள் அதிபர் பதவிக்காக போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலோ, விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் குடியரசு கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளி பொறியாளரான ஹர்ஷ்வர்தன்சிங் என்பவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
38 வயதே ஆன இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியர்களில் ஒருவர் அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா? அமெரிக்காவை இந்தியர் ஒருவர் ஆட்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த ரிஷி சுனக் தான் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது