வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2nd ODI கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்

சனி, 29 ஜூலை 2023 (19:39 IST)
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இத்தொடரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இன்று 2 வது ஒரு நாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே தற்போது, விக்கெட் இழப்பின்றி 8.3 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், இஷான் 25ரன்களும், கில் 17 ரன்னும் அடித்து விளையாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்