சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் மருந்து கடை உரிமையாளர்கள்

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (07:54 IST)
சென்னை அயனாபுரத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்'றில் 12 வயது சிறுமி, 21 நபர்களால் மாறி மாறி சுமார் ஏழு மாதங்கள் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் 66 வயது லிப்ட் ஆபரேட்டர் ரவிகுமார் என்பவர்தான் முதல்குற்றவாளியாக கருதப்படுகிறது. இந்த நபர் ஏற்கனவே பிரசவ வார்டில் பணிபுரிந்துள்ளதால் மயக்க மருந்து குறித்து தெரிந்து வைத்துள்ளார். இதன்படி மருந்து கடைகளில் மயக்க மருந்து வாங்கி சிறுமிக்கு சிரிஞ்ச் மூலம் செலுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். 
 
மயக்க மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. ஆனால் ரவிகுமார் சர்வ சாதாரணமாக துண்டிச்சீட்டில் மயக்க மருந்து பெயரை எழுதி வாங்கியுள்ளார். இந்த நிலையில் ரவிகுமாரை காவலில் எடுத்து அவர் எந்தெந்த மருந்துக்கடைகளில் மயக்க மருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரணை செய்து உடனடியாக அந்த மருந்துகடைகளிலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இன்றி மயக்க மருந்து விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்