கான்பூர் நபரின் வயிற்றில் ஸ்டீல் கிளாஸ்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள்

வெள்ளி, 6 ஜூலை 2018 (21:11 IST)
கான்பூரில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த ஒருவரின் வயிற்றில் உள்ள ஸ்டீல் கிளாஸை டாக்டர்கள் பலமணி போராட்டத்திற்கு பின்னர் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.
 
கான்பூரில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த ராம்தின் என்பவரை சமீபத்தில் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதனால் மயக்கம் அடைந்த அவருடைய பின்பக்கத்தின் வழியே ஸ்டீல் கிளாசை சொருகிவிட்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர்.
 
அந்த கிளாஸ் ராம்தினின் வயிற்றுக்குள் சென்றுவிட்டது. இதனையறியாத ராம்தின் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். டாக்டர்கள் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருடைய வயிற்றில் ஸ்டீல் கிளாஸ் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
பின்னர் டாக்டர்கள் குழு ஒன்று அவருடைய வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து அந்த ஸ்டீல் கிளாசை வெளியே எடுத்தான்ர். தற்போது அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அவர் குணமாக இன்னும் ஒருசில வாரங்கள் ஆகும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்