சமீபத்தில் கனடா நாட்டில் உள்ள கியூபெக் நகர அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள் உடனடியாக சம்பள உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களைவிட சம்பளம் குறைவாகவும், அதிக உழைப்பும் தந்து கொண்டிருக்கும் நர்ஸ்கள் உள்பட மற்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தாருங்கள் என்றும், எங்களுக்கு இப்போது வழங்கப்படும் சம்பளமே போதுமானது என்றும் கியூபெக் நகர மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.