ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

vinoth
ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (15:52 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளன.

படம் விறுவிறுப்பான ஆக்‌ஷன் கதைக்களமாக இருக்கும் என்பதை டிரைலர் கோடிட்டு காட்டியுள்ளது. போலீஸ் என்கவுண்ட்டர்கள் மற்றும் கல்வித்துறை மாஃபியா ஆகியவற்றை பற்றி பேசும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பெருவாரியான திரையரங்குகளில் தங்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்