தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ள நடிகர் சூர்யா, இன்னொரு முக்கிய இயக்குநருடன் இணைய இருப்பதாக தற்போது திரையுலகத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அந்த இயக்குநர் ராம், அவரும் தேசிய விருது பெற்றவர் தான்.
சூர்யா சமீபத்தில் 'ரெட்ரோ' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்த படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போது அவர், ஆர்.ஜே பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், 'வாடிவாசல்' படத்தின் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இந்தப் படத்துக்கான பாடல்களை உருவாக்கும் பணியை தொடங்கிவிட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில், இயக்குநர் ராம் கூறிய கதையை சூர்யா விரும்பியுள்ளதாகவும், இருவரும் விரைவில் புதிய படத்தில் இணைவது உறுதியானதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியால் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ரசிகர்கள், "சூர்யா-ராம் கூட்டணி முதல் முறையாக உருவாகும் இந்த படம், தேசிய விருது தரம் வாய்ந்ததாக இருக்கும்!" என உற்சாகமாக கருத்து தெரிவிக்கின்றனர்.