வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

vinoth

சனி, 5 அக்டோபர் 2024 (08:15 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளன.

படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் நடித்துள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனின் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அமிதாப் பச்சனுக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். இது பாலிவுட் படங்களில் நடிக்க அவர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

34 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்துடன் இந்த படத்தில் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன் முதல் முதலாக நடிக்கும் ஒரு தமிழ்ப் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்